புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார்,அக்கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன்,அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
மாவீரர் நினைவு தினத்தன்று மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு கொடி ஏற்றும் கம்பிகளை கொண்டுசென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அது தொடர்பில் அறிவதற்காக வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்களை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சட்ட செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த மாதம் 27ஆம் தேதி எமது கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் அவரது மகனும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இன்று அவர்களை சென்று பார்வையிட்டதோடு வழக்கு தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினோம்.
அமைப்பாளருக்கு டயாபிடிக் நோய் இருப்பதினால் அவரது கால் வீங்கி காணப்படுவதனால் இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை பொறுப்பு அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருக்கின்றது எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஈடுபடுவதற்கு முழுமூச்சாக முயற்சிகளை அமைந்துள்ளது நாங்கள் அவருக்கு கூறியிருக்கின்றோம்.
மக்களால் அங்கீகரிக்கப்படாத மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு ஜனாதிபதி ஏதோ ஒரு வகையிலே தான் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக இனவாதத்தை கைகெடுத்து உரிமைக்காக போராடுகின்ற எம்மை போன்றவர்களை கடுமையாக அச்சுறுத்தி சிங்கள மட்டத்திலேயே தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டால் சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு வாக்குகளை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையிலே செயல்படுகின்ற பல விடயங்களில் இவர்களுடைய கைது செய்யப்பட்டவர்கள் விடயங்களில் அதன் ஒரு அங்கமாகத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்.
இடவாதத்தைக் காட்டி ஒரு சிங்கள பௌத்த மக்களினுடைய வாக்குகளை பெறலாம் என்று எதிர்பார்க்கின்றார் ஆனால் அவருடைய சிங்கள பௌத்த மக்களுக்கு எந்த அளவு தூரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றார் என்பது மக்கள் இந்த நாடகங்களை தாண்டி விளங்கிக் கொள்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
விஷேடமாக வட் வரியினை அதிகரித்திருப்பது குறிப்பாக நடுத்தர வர்க்கமும் சாதாரண அப்பாவி ஏழை மக்களையும் தான் குறி வைத்திருக்கின்றார்கள் ஆனால் நாட்டை உண்மையில் அழித்த நேரடியாகவே கொள்ளை அடித்து இந்த அரசு தரப்புகளின் உடைய செல்வாக்குகளை பயன்படுத்தி கோடிக்கணக்கான ஐ இலாபம் தேடிய தரப்புகள் இன்று எந்த விதத்திலும் வட் வரி போன்ற விடயங்களில் பாதிக்கப்பட போவதில்லை.
இதுவரையில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக எது வித நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை அது மாத்திரம் இல்லை இன்று கொள்ளையடித்தவர்களோடு சேர்ந்து தான் ஆட்சி பீடத்திலே ஒன்றாக உட்கார்ந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த நாட்டை கொள்கை ரீதியாக பொருளாதார சம்பந்தமாக எதுவிதமான அறிவும் இல்லாமல் நிபுணத்துவம் இல்லாதவர்கள் முடிவுகள் எடுத்து தங்களுடைய நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள், கொள்ளை அடித்து தங்களுக்காகவும் அந்த பணத்தினை சேகரிப்பவர்கள் இவர்களின் நலன்களுக்காக செயல்பட்டதன் காரணமாக நாடு இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
ஒரு அறிவும் இல்லாதவர்கள் ஆட்சி பீடத்திற்கு இருந்த இடத்தில் வந்து அவர்கள் எடுத்த முடிவுகளாலேதான் சாதாரண பொது மக்களும் சம்பந்தபடாதவர்களும் இன்று முற்று முழுதாக பழி சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் அந்த பாரிய தவறை வழங்கிக் கொள்ளாமல் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் ஒரு பொருளாதாரம் சம்பந்தமாக நிபுணத்துவம் பெற்றவர் அல்ல அவர் ஒரு சட்டத்தரணி இவர்களுக்கு இந்த வகையான அறிவு கிடையாது இதற்கு முதலும் ஜனாதிபதி ஒருவர் வந்து ஒரு அறிவும் இல்லாததன் விளைவாகவே இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் இந்த ஜனாதிபதியும் அந்த அளவுக்கு அதாவது கோத்தபாய ராஜபக்ஷவை விட மோசமாக இல்லை என்று சொன்னாலும் கூட அவரை சுற்றிவர ஆலோசனை வழங்கும் தரப்புகள் அனைத்தும் அந்த ஜனாதிபதியுடன் கூட இருந்தவர்களே.
ஆகவே இப்படிப்பட்ட நபர்கள் தொடர்ந்து எடுக்கும் முடிவுகளினால் கொள்ளையடித்தவர்கள் நாட்டை அழித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் தவிர மாறாக உண்மையில் பிடிக்க வேண்டியவர்கள் கொள்ளையடித்தவர்கள் வெளிநாட்டில் வைத்திருக்கின்ற பணத்தினை திரும்ப இந்த நாட்டிற்கு கொண்டு வந்து இந்த நாட்டினுடைய பொருளாதார சிக்கலில் இருந்து நிற்பதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த சுமைகள் முழுக்க முழுக்க இந்த நாடு விழுவதற்கு சம்பந்தப்படாத நாட்டுக்கு நேர்மையாக உழைத்தவர்கள் மீதுதான் செலுத்தப்படுகின்றது. இவ்வாறானவர்கள் ஒரு அரசியல் பழிவாங்கல்களுக்காக இவ்வாறான உண்மைகளை நாங்கள் கூறுவதற்காக எங்களுடைய உறுப்பினர்களை பழிவாங்குகின்ற கோணத்தை வந்து செயல்படுகின்ற அதே தரப்பினர் இன்று அவர்களது அறிவில்லாத காரணத்தினால் சிங்கள மக்களின் வாழ்க்கை இணையும் அளிக்கின்ற அளவுக்குத்தான் இன்றைய நிலை காணப்படுகின்றது.
இது நீண்ட தூரம் இவர்கள் இவர்களது நாடகங்களை நடித்து படுமோசமான மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ந்தும் செய்ய முடியாத நிலை உருவாகும் அதை மக்கள் உணர்ந்து தங்களுடைய செய்ய வேண்டிய பொறுப்பை சரியான கோணத்தில் எதிர்ப்பை தெரிவிப்பதன் ஊடாக தடுத்து நிறுத்துவார்கள் என்று நாங்கள் நம்பி இருக்கின்றோம்.
நாங்கள் அதனை கடுமையாக எதிர்ப்போம் ஏற்கனவே 13 ஆம் திருத்தத்திற்குள் ஒற்றையாட்சி தமிழ் அரசியலை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாரிய மக்களை திரட்டி பாடியதற்கு போராட்டங்களை நடத்தி இருந்தோம் அதேபோன்று இந்த ஒற்றை ஆட்சிக்குள் இயக்கியராஜ் அரசியல் அமைப்பு ஒன்றை சம்பந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பு வந்து தயாரித்து அதனை 2015ல் திணிக்க வந்த போது அதனை நாங்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்கி மக்கள் அணி திரண்டு எழுக தமிழ் ஒன்றினை நடத்தி அதனை தோற்கடித்தோம்.
அதேபோன்று உலகத் தமிழர் பேரவை ஒன்று கூட்டமைப்பின் தொடர்ச்சி அதனுடைய ஒரு பங்காளிகளாக முகவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய புலம்பெயர்ந்த தமிழ் மக்களாலும் ஏனைய தங்கி இருக்கக்கூடிய அமைப்புகளாலும் நிராகரிக்கப்படுகின்ற ஒரு சில உதவிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் செய்ய முடியாத காரியத்தை அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றால் நாங்கள் நிச்சயமாக அதனை தோற்கடிக்க வேண்டும்.
இது ஒரு பெரிய சவால் இல்லை தமிழ் தேசியத்தில் ஊறி இருக்கக்கூடிய தமிழ் தேசியத்திற்காக எத்தனையோ தியாகங்களை செய்து கொண்டிருக்கின்ற நம்முடைய வடகிழக்கில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் கடைசி வரைக்கும் இடம் கொடுக்காது ஆனாலும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுப்பதற்கும் இப்படிப்பட்ட துரோக செயல்பாடுகளை செய்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர் அவர்களை இனம் கண்டு அவர்களோடு பயணிக்கின்ற அனைத்து தரப்புகளையும் இனம் கண்டு அவர்களை ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் அரங்கிலே நிறுத்தி ஓரம் கட்ட வேண்டும்.