பொரலந்த தொடக்கம் ஹொர்தொன்தன்ன வரையான ஓஹியோ பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஒஹியோ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டமையால் பாரிய சுற்றாடல் அழிவு ஏற்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை 03 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.