இன்று (18) முதல் 05 நாட்களுக்கு நாடு முழுவதும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.