மனிதர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஈர்ப்புள்ளதுடன், அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு நகரம் வேண்டும் என மஸ்க் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு செய்துள்ளார். “மனிதர்கள் நிலவில் தரையிறங்கி 66 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மனித நாகரிகத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது.
மனிதர்களுக்கு நிலவில் மூன் பேஸ்(moon base) இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த 1903இல் ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதல் முறையாக பறந்தது குறித்த பதிவு ஒன்றுக்கு மஸ்க், இதை பதிவிட்டுள்ளார்.