கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த
நவம்பர் 27ஆம் திகதி காணாமல் போயிருந்தது. இந்த மோட்டார் சைக்கள் தனித்தனிப் பாகங்களாக
கழற்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.
மோட்டார் சைக்கிளின் பாகத்தை விற்பனை செய்தவர் மீது சந்தேகமடைந்த பொலிஸார்
அவரை பிடித்து விசாரித்தபோதே இந்த விடயம் வெளிப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரை
உதிரி பாகங்களுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக
விசாரணைகளை கிளிநொச்சிபொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.