பயங்கரவாதிகளால் மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம் வௌியிட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் உறுதி செய்துள்ளார்.
மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் சிலர் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகின.
குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் “Cyber Criminal Area” எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரின் மியாவெட்டி (Myawaddy) நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முழுமையாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.
தாய்லாந்தில் கணினி துறையில் தொழில்களை பெற்றுத் தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் சிலர் இந்தப் பிரதேசத்திலேயெ தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் குறித்த 56 இலங்கையர்களையும் விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.