கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்ட நிலையில், எலான் மஸ்க் தனது ‘க்ராக்’ (GROK) செய்யறிவு தொழில்நுட்பத்தினை களத்தில் இறக்கியுள்ளார்.
எலான் மஸ்க்கின் செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ‘எக்ஸ் ஏஐ’ (xAI) இந்த ஏஐ இனை உருவாக்கியுள்ளது. தற்போது ‘க்ராக்’ தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் பயனாளர்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு உள்ளது. இது ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இச் செய்யறிவு தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தையும் தனது தகவல் பெறும் இடமாகக் கொண்டு செயல்படுவதால் மற்ற அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களை விட புதிய தகவல்களைத் தருவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
க்ராக் கிண்டலாகப் பேசும் குணம் கொண்டது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்ற ஏ.ஐ-களைப் போல் இல்லாமல் கேட்கும் தகவல்களை ‘க்ராக்’ கிண்டலான வகையில் தருவதாகப் பயனாளர்களும் தெரிவிக்கின்றனர்.