நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று (25.12.2023) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையிலேயே இடம்பெற்றது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையின் பின்னணியில் உள்ள கொலையாளியை கைது செய் வேண்டும் என வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்தார்.
இந்த கொலையின் பின்னணியில் பிள்ளையானின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் கோட்டாபாய அதிபராக பதவியேற்று ஓரிரு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.