உலகின் மிகப்பெரிய ஆபாச வீடியோ இணையதளங்களில் ஒன்றான PornHub இன் தாய் நிறுவனமான ஐலோ, பெண்களைக் கடத்தி பாலியல் வீடியோக்களை எடுத்து லாபம் ஈட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளது.
கேமரா முன் பெண்கள் பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தி, அந்த வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது. வீடியோவில் தோன்றிய பெண்களின் அனுமதியின்றியே அந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளை ஏற்று வாக்கு மூலம் அளித்துள்ள அய்லோ (Aylo) நிறுவனம், 1.8 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துவதாகவும் பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பெண்களைக் கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தும் குற்றத்தில் ஈடுபடாமல் இருப்பதாக ஒப்பந்தம் ஒன்றிலும் அய்லோ நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகள் கண்காணிப்பில் இருக்கும். நிபந்தனைகளைக் கடைபிடித்தால் அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜிடிபி (GDP) எனப்படும் கேர்ள்ஸ் டூ பார்ன் (Girls Do Porn) என்ற மற்றொரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டதை அடுத்து ஐலோ நிறுவனம் இந்த வழக்கில் சிக்கியது. ஜிடிபி இலிருந்து சுமார் 100,000 டாலரும், விளம்பரதாரர்களிடம் இருந்து சுமார் 764,000 டாலரும் பணம் பெற்றதாகத் கூறப்படுகிறது.
வீடியோக்களில் தோன்றும் சில பெண்கள் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்கள், கேமரா முன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.