மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் பாவனை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகையில்,
”எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப் பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பழைய பாவனையுடன் ஒப்பிடும் போது அத்தியாவசியப் பயணங்களுக்கு வாகனங்களில் எண்ணெய் வைத்துள்ளனர். முச்சக்கர வண்டிகள், பைக்குகளை ஓரளவே பயன்படுத்துகின்றனர்.” என்று குறிப்பிட்டார்.