கொழும்பில் 61,000 குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் 26 தோட்டங்களில் 61,000 இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் டப்ளியூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்தார்.
இதன் கீழ் தோட்டங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.