நாடளாவிய ரீதியில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (10.04.2023) பதிவாகியுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 84 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று (09.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியை சேர்ந்த 59 வயதிடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து தொலைபேசி, கிலோ 50 கிராம் பொதி செய்யப்பட்ட நாட்டு கஞ்சா ஒரு தொகை பணம் மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றத்தில் ஒப்படைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.