உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது.
China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றன.
அதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித இயந்திரங்கள் பார்ப்போரை வியக்கச் செய்யும் அளவுக்குகுத்துச் சண்டையில் ஈடுபட்டன.

இறுதியில் “AI Strategist” என்கிற இயந்திரமே வெற்றிபெற்றது.
CMG உலக இயந்திரப் போட்டியின் ஓர் அங்கமாக அந்தக் குத்துச் சண்டை போட்டி நடந்ததாக CGTN தெரிவித்தது.
மனித இயந்திரங்களுக்குக் காற்பந்து, கூடைபந்து ஆகிய போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.