கொழும்பு லயன்ஸ் கழகம் 306 பி2 ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வேண்டுகோளிற்கு அமைய மிஸ்பா மிஸனரி தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணியின் அனுசரனையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளன அலுவலகத்துக்கு கணினி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது. 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற இரு மாணவர்கள் எதிர் வரும் ஒரு வருடத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஐய்யாயிரம் ரூபா வீதம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் தேவ அதிரன் தலைமையில் மட்டக்களப்பு வொயிஸ் ஒப் மீடியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கொழும்பு லயன்ஸ் கழகம் 306 பி2 தலைவர் ராஜகுலசிங்கம் அங்கத்தவர் ஜெயச்சந்திர கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொருளாளர் வரதன் உட்பட கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளன நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.