பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய பேராசிரியர் கே இ கருணாகரன் அவர்களும் மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சியியல் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் அவர்களும் சேர்ந்து எழுதிய சமாதானத்திற்கான மருத்துவம் “Peace Medicine: A Health Care Concern ” என்கின்ற புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் (30.12.2023) சனிக்கிழமை மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக செளக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் இடம்பெற்றது.
மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம் சிறப்பு அதிதியாக வாழ்நாள் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நூலிற்கான அறிமுக உரை பீடத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் திரு செ. சாந்தரூபன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நூலிற்கான மதிப்புரை மனநல வைத்திய நிபுணர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமாரினால் வழங்கப்பட்டது.
அத்துடன் பிரபல பேராசிரியர்கள் வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலாக பல்வேறு துறைசார் அதிகாரிகள், பேரறிஞர்கள்,பீட ஊழியர்கள் , பீட மாணவர்கள் ,நூலாசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது. இதன் போது வருகைதந்த அதிதிகளுக்கும் , கலந்துகொண்டோருக்கும் நூல் நூலாசிரியர்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது.