2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு நேற்று 30.12.2023 நிலைபேண்தகு எதிர்காலத்திற்க்காக மரங்களை நடுவோம் எனும் தொனிப்பொருளிலில் செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் மற்றும் பீட ஊழியர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் அமைந்துள்ள ரெயின் வூட் எஸ்டேட் பிள்ளையாரடியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி கனகசிங்கம் , கெளரவ அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு கே மகேசன் ,யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள green layer enviromental அமைப்பின் தலைவர் திரு சசிகுமார் , சுவாமி விபுலானந்த அழகியல் கற்ககைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி,பதிவாளர் திரு எ.பகீரதன் கிழக்குப் பல்கலைக்கழக ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பீடத்தின் சிரேஷ்ட நூலகர் திரு எஸ் சாந்தரூபன் மற்றும் பீட ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு green layer enviromental அமைப்பின் அனுசரணையில் இடம்பெற்றது. மேலும் இந்த நிறுவனத்தால் 700 மேற்பட்ட மரக்கன்றுகளும் வழங்கக வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் திரு சசிகுமார், பீடத்தின் சூழலியல் நிதியத்திற்கு ரூபாய் 25000 இனை அன்பளிப்புச் செய்தார்.