மலையகத் தமிழர்கள் 200 வருடத்தினை பல இடங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையிலே இந்தியா அரசாங்கம் நேற்று (30) முத்திரை வெளியிட்டிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக முகவரி இல்லாது வாழ்ந்த மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை நீதி மன்றம் இப்போது தான் தீர்ப்பளித்திருக்கின்ற நிலையில் இந்திய வெளியிட்டிருக்கும் முத்திரை எங்களை நகைப்புக் உள்ளாக்கியிருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
இன்று (31) திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குமேலும் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுக்கு தேவை முகவரியே தவிர முத்திரை அல்ல இந்திய வம்சாவளி மக்கள் 200 என்றால் விஜயனும் அவர்களது தோழர்களும் இலங்கை வந்து 2,000 வருடங்களை கடந்து விட்டன.
விஜனும் அவர்களின் தோழர்களும் மன முடித்தெல்லாம் இந்திய பெண்கள் என்று தான் வரலாறு சொல்கிறது. எனவே இந்திய வம்சாவளியினர் 2,000 கடந்து மலையகம் 200 இல் தான் இந்த முத்திரையை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதா? என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
அப்படி பார்த்தால் இலங்கை சிங்களத்தில் உள்ள பல மொழி தான் நினைவுக்கு வருகிறது. யுத்ததிற்கு இல்லாத வாள் பலாக்காய் வெட்டவா என்று கேட்பது போல் தோன்றுகிறது.
எனவே எங்களுக்கு முகவரியே இல்லை அந்த முத்திரையை ஒட்டி என்ன செய்வது என்ற கேள்விளை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது.
இந்தியாவினால் வெளியிடப்பட்ட வீட்டுத்திட்டம் என்ன ஆனது இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின் இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களை இலங்கையில் அறிவித்தது என தெரிவித்தார்.