இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக கொழும்பிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.
தெரு நாய்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் (03) கொழும்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை காவல்துறை,

“நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அது முழுப் பொய்,”
இந்தியப் பிரதமரின் வருகைக்காக சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நாய்களை அகற்றுவதாக கூறுவது போல் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேசமயம் போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, நகரத்தை “அழகாக்க” அல்லது இந்தியத் தலைவரின் நடமாட்டம் தொடர்பான பாதுகாப்புக் காரணங்களுக்காக நாய்கள் அகற்றப்பட்டதாகக் கூறினர்.