தற்போது விடாது பெய்து வரும் கனமழையால் மட்டக்களப்பில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (01 )பிற்பகல் 2 மணிக்கு பின்னராக ஆரம்பமான மழையானது தற்போது விடாது பெய்து வரும் நிலையில் , மட்டக்களப்பில் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயந்திபுரம், ஊரணி பிரதான பாதையானது முற்றிலும் நீரில் மூழ்கி காணப்படுவதனால், அதனூடாக போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேசமயம் இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கையில்,இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.- என்று அறிவுறுத்தியுள்ளது.