இந்தியாவில் உள்ள மிகச்சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இலட்சத்தீவு தீவுகளின் தொகுப்பாகவும், உலகெங்கிலும் உள்ள பல கடற்கரைப் பிரியர்களுக்கு ஒரு கண்கவர் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
அங்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் சுழியோடிகளின் ஆடைகள் மற்றும் கருவிகளை அணிந்து கடலுக்கு அடியில் சுழியோடியுள்ளார்.
அதில், சாகசத்தை விரும்புவோர் யாராக இருந்தாலும், உங்களின் சுற்றுலா தலங்கள் பட்டியலில் ஒன்றாக இலட்சதீவு இருக்க வேண்டும். நான் இலட்சதீவில் தங்கியிருந்த சமயம், சுழியோடினேன். அது ஒரு உற்சாகமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.