நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை நேற்று (05) ஆரம்பிக்கப்பட்டது.
யுக்திய சுற்றிவளைப்பிற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஹப்புத்தளை Y சந்தியில் நேற்று காலை முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வெளி மாகாணங்களிலிருந்து பண்டாரவளை, பதுளை நகரங்களுக்கு வருகை தரும் பஸ்கள் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை மேற்கொண்ட வாகனங்களுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒன்றும் ஒட்டப்பட்டது.
பண்டாரவளை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபன முன்னிலையில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.