லக்னோவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிக சிக்ஸர்களை அடித்த ஐந்தாவது வீரர் என்ற
பெருமையைப் பெற்றுள்ளார்.முன்னதாக முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலியும் டு பிளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் பெங்களுரர் அணி வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் பெங்ளுரர் தோற்றது. இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, டு பிளசிஸ், மக்ஸ்வெல் ஆகிய மூவருமே அதிரடியாக ஆடி அரைச்சதம் அடித்தனர்.
விராட் கோலி 44 பந்துகளில் 61
ஓட்டங்களையும் மக்ஸ்வெல் 29 பந்துகளில் 59
ஓட்டங்களையும், டு பிளசிஸ் 46 பந்துகளில் 79
ஓட்டங்களையும் குவிக்க, 20 ஓவரில் 212 ஓட்டங்களை
குவித்தது பெங்களூர். இதனை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசிய விராட் கோலி ஐ. பி. எல்லில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பொலார்டை பின்னுக்குத்தள்ளி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி இந்த 4 சிக்ஸர்களின் மூலம் ஐ. பி. எல்லில் மொத்தமாக 227 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
ஐ. பி. எல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல், கிறிஸ் கெய்ல் – 357 சிக்ஸர்கள், டி வில்லியர்ஸ் – 251
சிக்ஸர்கள், ரோஹித் சர்மா – 241 சிக்ஸர்கள், டோனி – 232 சிக்ஸர்கள், விராட் கோலி – 227 சிக்ஸர்கள்