தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரம் தங்க குவியிலின் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நகரத்தில் தங்கம் காணப்படும் விண்வெளி புகைபடமொன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த City on Gold-ன் கீழே உள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளிக்கு மிக அருகில் அதேவேளை, இந்த நகரம் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகின்றமையால் விண்வெளிக்கு மிக அருகிலான (City Closest To Space) உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அதன் உயரம் காரணமாக, இது கிரீன்லாந்தைப் போல மிகவும் குளிராக காணப்படுகிறது.
மேலும், நகரத்தின் மக்கள் தொகை 60 ஆயிரமாக காணப்படுகின்றதோடு இங்கு அதிகமான மக்கள் தற்போது வந்து குடியேறுவதாக கூறப்படுகிறது.
தங்கச் சுரங்கம் மட்டுமின்றி, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன, சட்டப்படி, இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை, எனினும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக இங்கு தங்கச் சுரங்கங்களை தோண்டி வருவதும் தெரியவந்துள்ளது.