மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் துண்டிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இன்று(08) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபத்தை ஈட்டியிருக்கும் வேளையில்,இந்த இலாபம் நாட்டின் மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாமை ,மின் கட்டணம் அதிகப்படியாக அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத 8 இலட்சம் மின் நுகர்வோரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் இதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என சில விடயங்களை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.