Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் கவனத்தை ஈர்த்த லட்சத்தீவு!

உலகின் கவனத்தை ஈர்த்த லட்சத்தீவு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் துபாய், மாலைத்தீவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதனடிப்படையில் ஹாலிவுட் திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் புத்தாண்டு, பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாளை உலகின் பிரபல சுற்றுலா தலங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம் பிரபலங்களில் முதல் விருப்பத் தேர்வாக இருந்து வந்தது.

ஹாலிவுட் நடிகர்கள் வில் ஸ்மித், ஜேசன் ஸ்டேதம் உட்பட பல்வேறு பிரபலங்கள் துபாய்க்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் துபாயில் அடிக்கடி முகாமிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் துபாயில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி உலக பிரபலங்கள் துபாயை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் விடுமுறையை கொண்டாட மாலைத்தீவுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் அண்டை நாடான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாலைத்தீவு உலகின் பிரபல சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வியாபித்து பரவி வருகிறது.

கடந்த இரு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பிரபல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை ‘லைக்’ செய்துள்ளனர்.

இந்தியாவில் கோவா கடற்கரை சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலைதீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி கேரளா அருகேயுள்ள லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

அதேவேளை மோடியின் லட்சத்தீவு விஜயத்திற்கு மாலைத்தீவு அமைச்சர்களால் அவதூறு கருத்துகள்
பரப்பப்பட்ட நிலையில் அவை இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மாலைத்தீவை தவிர்த்து இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்லமாறு இந்திய பிரபலங்கள் தங்கள் எக்ஸ் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
அம்பாறை பிரதேச செயலக பிரிவிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

அம்பாறை பிரதேச செயலக பிரிவிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.