ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள்,புகைப்படக் கருவிகள் என பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை பொதுவான ஒரு முன்னேற்றும் போர்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பின் படி புதிய போர்ட் ஆனது இந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றம் தெரிவிக்கையில்,
அனைத்து புதிய கையடக்கத்தொலைபேசிகள், டப்லெட்டுகள் (Tablets), டிஜிட்டல் புகைப்படக்கருவிகள், நுணுக்குப்பண்ணிகள், கையடக்க காணொளி விளையாட்டுக்கருவிகள் மற்றும் ஒலிபெருக்கிகள், விசைப்பலகையில், சுட்டிகள், மடிக்கணினிகள் என அனைத்து கருவிகளுக்கும் 100 வாட்ஸ் வரை மின்சார விநியோகத்துடன், USB Type-C போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியது.