பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலநேரத்தில் “ யுக்திய” விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதன்போது 296 கிராம் ஹெரோயின், 194 கிராம் ஐஸ் போதைப்பொருள், 117 கிலோ 421 கிராம் கஞ்சா ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களில் 42 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நால்வரின் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொழும்பு மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குவதுடன் இவர்கள் இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மருதானையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது 50 பொலிஸ் அதிகாரிகளும் 50 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.