கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை ஓட்டமாவடி,வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு,மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை,பதுரியா நகர் மாஞ்சோலை,தியாவட்டவான்,பாலைநகர் போன்ற கிராமங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் வெள்ள நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி மாஞ்சோலை ,செம்மண்ணோடை, மீராவோடை,பதுரியா நகர் போன்ற பல்வேறு கிராமங்களை ஊடருத்துச் செல்லும் பிரதான நீரோடையின் நீரோட்டத்துக்கு தடையாக உள்ள பாரிய அளவான ஆற்றுவாழைகள் மற்றும் குப்பை கூழங்கள் இன்று பதுரியா -மாஞ்சோலை அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க அக்கழக வீரர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இவ்வெள்ள நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.