Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமது ஆட்சியில் இலகு ரயில் திட்டம் நிச்சயம் ஆரம்பிக்கப்படும்; ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர்!

எமது ஆட்சியில் இலகு ரயில் திட்டம் நிச்சயம் ஆரம்பிக்கப்படும்; ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர்!

3 years ago
in செய்திகள்

ராஜபக்ஸ அரசாங்கத்தில் எவ்வித அடிப்படை காரணிகளும் இன்றி இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உட்பட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சஜித் பிரேமதாச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
மட்டு லியோ கழகத்தின் சாதனை!

மட்டு லியோ கழகத்தின் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு