மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பணம் தேடும் முறை தனக்கு நன்கு தெரியும் எனவும், தேவைக்கு ஏற்ற வகையில் வழங்கல்களை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், அவற்றை செய்ய தமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கடந்த 3 வருடங்களில் சக்வல, ஹுஸ்ம வேலைத்திட்டங்கள் கமிசன் பெறாமலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும், ஏழு மூளையான்கள் இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் தொகுதிகளில் இருந்து கமிசன் கிடைத்திருக்கும் எனவும், அந்த கமிஷன்களை பெற்றதன் பலனாக நாடு வங்குரோத்து நிலைக்கு மாறியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய திருடர்களை கூட ஐக்கிய மக்கள் சக்தியே பிடித்ததாகவும், அதனால் தான் இன்று பயமின்றி கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு உண்மையினை புரிய வைக்க முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மாத்தறை, கம்புருபிட்டியவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாற்றம் என்று கூறும் குழுக்கள் எதனையும் செய்யவில்லை எனவும், இலட்சக்கணக்கான பணத்தை செலவிட்டு பேரூந்துகளில் இருந்து மக்களை அழைத்து வந்து கூட்டங்களை நடத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடத்திற்கு தான் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், பொய்யான கூற்றுக்களில் சிக்கினால் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.