Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை; இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை; இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிழக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திகளைப் பணிகளை நேற்று வியாழக்கிழமை (18.01.2024) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பார்வையிட்டார்.

செப்பனிடப்படவுள்ள வீதிகளைப் பார்வையிட்ட பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இறைவனுடைய அருளாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள காத்திரமான நடவடிக்கைகளாலும் பொருளாதாரம் படிப்படியாக மீளெழுச்சி கண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 விதவைத் தாய்மார்கள் உள்ளார்கள், 8000 மாற்றுத் திறனாளிகள் உள்ளர்கள், 25000 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், 8000 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், இவ்வாறான நிலையில் இம்மாவட்டத்தில் எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவில்லை.

நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது குடும்பத்தினரோடு இம்மாவட்ட மக்கள் இம்மாவட்டத்திலே வாழவேண்டும். நாம் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு இரண்டும் தேவை. நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை. எனவே எமக்கு உரிமையும் தேவை, அபிவிருத்தியும் தேவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை நாம் உருவாக்க வேண்டும். பிச்சைக்காரர்களின் புண் போல ஒரே பிரச்சனையை வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருக்க முடியாது.

பிச்சைக்காரன் புண்ணை காட்டி பிச்சை எடுப்பான் , மாறாக சிலர் தமிழர்களின் பிரச்சனையைக் காட்டி வாக்கெடுக்கின்றார்கள். இறுதியில் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் எமது சமூகத்திற்கு எம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்பதுதான் எமது நோக்குமாகும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
Next Post
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டம்!

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு