Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

3 years ago
in மட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் கடத்தலுடன் கருணா, பிள்ளையான்,மகிந்த ராஜபக்ச ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட தெரிவித்துள்ளார்.

சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மட்டக்களப்பில் ‘நியாயப்பயணம்’ என்னும் தொனிப்பொருளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (16.04.2023) 340ஆவது நாளை எட்டியுள்ளது.

இது குறித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருணா, பிள்ளையான் ராஜபக்ச இவர்கள் தனித்தனியானவர்கள் அல்ல எனவும் இவர்கள் இணைந்து ஒரு குழுவாகவே செயற்படுவதாகச் சந்தியா எக்னலியகொட கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, அவருடைய அரசியலை நிலை நிறுத்துவதற்காக இந்த மண்ணில் கருணாவையும் பிள்ளையானையும் பாவித்துள்ளதாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்ற அனைத்து விதமான கொலை, கொள்ளை கடத்தல்களுக்கு இவர்களே மூல காரணமாக இருந்ததாகச் சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் கடத்தப்பட்டதில் இவர்களுடைய தொடர்பு இருப்பதாகவும் இன்று தன்னைப் போன்று பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது கணவரின் சுவாசக் காற்று இறுதியாகப் பிரிந்தது மட்டக்களப்பு மண்ணில் என தான் அறிந்துள்ளதாகவும் சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்கே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவந்துள்ளதாகக் காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
Next Post
பிள்ளையானின் வாகனப் பேரணியில் குடும்பஸ்தர் படுகாயம்!

பிள்ளையானின் வாகனப் பேரணியில் குடும்பஸ்தர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு