ஓரினச்சேர்க்கை Dating App மூலம் ஆண்களை வரவழைத்து கொள்ளையடிக்கும் இளைஞர்கள் சிக்கினர்.
இலங்கை மின்சார சபையில் (CEB) மீட்டர் வாசிப்பாளராக பணிபுரியும் நபரிடமிருந்து 100,000. ரூபா கொள்ளையடித்த குற்றத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபரை வில்லோராவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இழுத்து சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அவரின் ஆடைகளை அவிழ்த்து, அடித்து, கொள்ளையடித்துள்ளதாகவும் மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஒரு சந்தேக நபர் ஓரினச்சேர்க்கை ஆன்லைன் டேட்டிங் செயலியான ‘கிரைண்டர்’ மூலம் CEB ஊழியரை chat செய்து கவர்ந்துள்ளார்.
பின்னர் சந்தேகநபர் அனுப்பிய விலாசத்தை பயன்படுத்தி வில்லோரவத்தை வீட்டிற்கு வந்துள்ளார், அந்த விலாசத்தில் இருந்த இளைஞர் அவர் வந்தவுடன் தனது ஆடைகளை களைந்து, CEB ஊழியரின் ஆடைகளையும் களைந்துள்ளார்.
அதன்போது எதிர்பாராத வகையில் அந்த வீட்டுக்குள் சில இளைஞர்கள் புகுந்து CEB ஊழியரை தாக்கி உள்ளனர்.
வீட்டில் இருந்த இளைஞனின் உடைகளை கழற்றி அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக CEB ஊழியரை குற்றம் சாட்டி, பொலிஸாருக்கு அறிவிப்போம் என அச்சுறுத்தியுள்ளனர்.
அச்சுறுத்திய பின்னர், சந்தேகநபர்கள் அவரது டெபிட் கார்டு மற்றும் PIN ஐப் பெற்று அதில் இருந்து ரூ. 70,000 மற்றும் மற்றொரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 29,000. ரூபாவை ATM இல் இருந்து எடுத்துள்ளனர்.
எல்லாவற்றையும் இழந்த CEB ஊழியர் வெளியில் வந்து அருகில் இருந்த பொலிஸ் ஸ்டேசன் ஒன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார், வில்லோரவத்தை, ராவத்தவத்தை மற்றும் லக்ஷபதிய பிரதேசங்களில் இருந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இதே போன்று இராணுவ மேஜர் ஒருவரையும் பாடசாலை ஆசிரியர் ஒருவரையும் Dating App மூலம் வரவழைத்து கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.