சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 39 பேர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த நாட்டு நேரப்படி நேற்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் கடந்த நாட்டில் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலில் 13 சிறுவர்கள் பலியாகினர்.
பின்னர் அதன் அதிகாரிகள் 7 பேரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
அதேநேரம், கடந்த நவம்பர் மாதம் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 26 பேர் பலியாகினர்.
அதற்கு முன்பாக வடமேற்கு சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 31 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.