கடந்த வாரம் ஒரு ஆராய்ச்சி செய்மதியொன்று ஏவப்பட்டதையடுத்து, மேற்கத்தேய நாடுகளின் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மீண்டும் 3 செய்மதிகளை ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த செய்மதிகள் 450 கிலோமீற்றர் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானின் விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை, சோரயா என்ற ஆராய்ச்சி செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியது.
இதனை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை இதற்கு கண்டித்திருந்தன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஈரானுக்கு இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.