ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளர்.
மேலும், அனைவருக்கும் வரி இலக்கம் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் இல்லாமை இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை நியமிக்கவும் பல்கலைக்கழக பட்டதாரிகளை நியாயமான சம்பளத்துடன் பயிலுனர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரி பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.