தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் கூறியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (28)ஆம் திகதி கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இவ்வாறு பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
“கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான்.
ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். 8 வழி சாலையில செல்வது திமுக, பிஜேபி தான். சிஎஸ்கேனு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது.
நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்” எனக் கூறினார்.”
எனவே,இதனை இணையவாசிகள் தொடங்கி கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தனியார் அமைப்பு மூலம் நடைபெறும் கிரிக்கெட் போட்டியாகும். இதில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே சிஎஸ்கே அணி விளையாடுகிறது.
எனினும் இதில் தமிழ் வீரர்கள் விளையாடாதது பேசுபொருளாகவே உள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்காதது பெரும விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தமிழக சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.