Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் – காஸா மோதல்; விரைவில் 2வது முறையாகவும் தற்காலிக போர் நிறுத்தம்!

இஸ்ரேல் – காஸா மோதல்; விரைவில் 2வது முறையாகவும் தற்காலிக போர் நிறுத்தம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரான்ஸில் சிஐஏ, மொசாட் மற்றும் கட்டார் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்கிரமானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.

இது இப்படியே போனால் சரிபட்டு வராது என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனவே போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில் நார்வே நாட்டில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்டப்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாரிஸில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, ஷின் பெட் தலைவர் ரோனென் பார், கத்தார் பிரதம மந்திரி முகமது அல்-தானி மற்றும் எகிப்திய புலனாய்வு சேவைகளின் தலைவர் அப்பாஸ் கமல் என முக்கிய நபர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த முறை 60 நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முடிவை நோக்கி பேச்சுவார்த்தை நகர்ந்துக்கொண்டிருப்பதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரவிக்கின்றன.

முதல் 30 நாட்கள் போர் நிறுத்தத்தின்போது வயதான பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அடுத்த 30 நாட்களில் பெண் கைதிகள், காயமடைந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பணய கைதிகளை விடுவிப்பது 3 கட்டங்களாக நடக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவை சாத்தியமாக வேண்டும் எனில், முதலில் போர் நிறுத்தம் சாத்தியப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
Next Post
கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் இறந்து காணப்படும் மீன்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் இறந்து காணப்படும் மீன்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.