இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமையை காணமுடிகின்றது.
இலங்கையில் தற்போதைக்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக நகர்ப்புறவாசிகள் மட்டுமன்றி நகரங்கள் ஊடாக வாகனங்களில் பயணிப்போரும் கடும் தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.