சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் உள்ளிட்ட சில இன சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
நாட்டில் திட்டமிட்ட அடிப்படையில் இன ஒடுக்குமுறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுவிட்சர்லாந்தின் இனவாதத்திற்கு எதிரான சேவை (Anti-Racism Service) அரசாங்க நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் திட்டமிட்ட அடிப்படையில் இனவாத செயற்பாடுகள் இடம்பெறவதாக கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை குற்றம் சுமத்தியிருந்தது.
வீடமமைப்புத் திட்டங்களில் சந்தர்ப்பம் மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவற்றில் தமிழர்கள், அல்பானியர்கள், துருக்கியர்கள், ஆபிரிக்கர்கள் போன்றோர் இனவாத அடிப்படையில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறம், பெயர்கள், மொழி மற்றும் உச்சரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் இனக்குரோத செயற்பாடுகள் கட்டவிழ்த்துப்படுவதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.
பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுவிட்சர்லாந்தில் இனவெறுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
எனினும் முதல் தடவையாக அரசாங்க நிறுவனமான இனவாத எதிர்ப்பு சேவை இந்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் 630 இனக்குரோத செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்று வரும் இனக்குரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து அசராங்கம் தெரிவித்துள்ளது.
அதிகளவில் இனக்குரோத நடவடிக்கைகளினால் பாதிக்கபடும் இன சமூகத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொது மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து தீர்வு வழங்கப்படும் என இனவாதத்திற்கு எதிரான சேவை தெரிவித்துள்ளது.