ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து மத்திய வங்கியை கொள்ளையடித்த அர்ஜீனன் மகேந்திரனுடைய மருமகனாக இருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி இந்த கும்புறுமூலை,கல்மடு,வாழைச்சேனை மக்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமுடியாது.என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கட்டப்பாடு கும்புறுமூலையில் உள்ள தோனாவில் காணப்பட்ட மீன்கள் திடிரென கடந்த திங்கள் கிழமையன்று -29 இறந்து காணப்பட்டுள்ள விடயம் தொடர்பாக பிரதேச மீனவர்கள் மட்டக்களப்பு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் விடுத்த வேண்டு கோளினை அடுத்து இன்று அவர் அப்பிரதேசத்திற்கு சென்று நிலமைகளை அவதானித்ததுடன் மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர் தெரிவிக்கும் போது….
இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள எதனோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றிய கழிவு நீர் தோணாவில் கலந்ததினால் மீன்கள் இறப்பதற்கு இத்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவிப்பதாகவும்; அத்துடன் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து எதனோல் தொழிற்சாலை அமைத்து அதன் மூலமாக பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இன்றைய தினம் 01.02.2024 அன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவள்ள பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கவனமெடுக்கவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.