தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்கவேண்டும்.வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்கவேண்டியதுதானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரே நாட்டுக்குள் ஒரே சட்டத்தினை பேணிப்பாதுகாக்கமுடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை என்ற நிலைமைக்கு எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு தை மாதம் 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் படுகொலைசெய்யப்பட்டவர்களை மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் நினைவு கூரும் நிகழ்வினை நடாத்தியமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் மீது கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
நேற்றையதினம் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றபோது வழக்கு எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்ற தடையினை மீறி குறித்த நிகழ்வினை நடாத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய அமைப்பாளர் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம்,
கடந்த 2022 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கு நாங்கள் வழமை போல நினைவேந்தலினை முன்னெடுத்தோம் ஆனால் அந்த ஆண்டு சிலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது நினைவு கூற முடியாது என்று இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு இந்த நாட்டில் ஒரு சட்டம் இல்லை என்பது இதன் மூலமாக வெளிப்படையாக தெரிகின்றது.
இந்த நாட்டை ஆள வருகின்ற ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்ததை சட்டமாக இந்த நாட்டிலே கொண்டு நடத்துவது தான் ஒரு முறையாக இருக்கின்றது ஏனென்றால் தொடர்ச்சியாக நாங்கள் அந்த தூபியிலே நினைவு கூர்ந்து விளக்கேற்றி வருகின்றோம் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு நாங்கள் அந்த தூபியிலே நினைவேந்தலினை செய்தோம். 2022 ஆம் ஆண்டு நமக்கு அதில் தடை விதிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு திரும்பவும் நினைவேந்தலினை செய்திருக்கின்றோம் எதுவிதமான பிரச்சனைகளும் இல்லை 2024 ஆம் ஆண்டு கூட நேற்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த தூபியிலே விளக்கேற்றி இருந்தோம். எது விதமான பிரச்சினையும் இல்லை. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி கோட்டபாய ஆட்சியிலே இருந்த நேரம் அவருடைய உத்தரவு இந்த நாட்டின் சட்டம் அல்ல இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு அல்ல அவருடைய உத்தரவின் பேரில் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் எனக்கு எது விதமான தடை உத்தரவும் கிடைத்திருக்கவில்லை ஆகையினால் நான் வளமை போன்று அன்றைய தினம் என்னுடைய கட்சிக்காரர்களுடன் சென்று விளக்கு ஏற்றினேன் ஆனால் எனக்கு எதிராகவும் தர்மலிங்கம் சுரேஸ்க்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்கள்
ஒன்று இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா அல்லது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் இருக்கின்றதா என்பதனை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும் ஏனென்றால் வடக்கு கிழக்கிலே இறந்தவர்களுக்கு நாங்கள் அவர்களை நினைவு கூறவும் முடியாது அவர்களுக்காக விளக்கேற்றவும் முடியாது என்று கூறினால் தெற்கிலே இந்த நாட்டிலே கிளர்ச்சியை ஏற்படுத்திய ஜேவிபியினர் அவர்கள் தங்களது தலைவர்களை அவர்களுடன் மரணித்தவர்களை நினைவு கூறலாம் அவர்களுக்காக பல்கலைக்கழகத்தில் கூட சிலை அமைத்து நினைவு கூறலாம் என்றால் வடக்கு கிழக்கிலே ஏன் இவ்வாறான தடைகள் காணப்படுகின்றது இந்த தடைகள் மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள் தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டிலே ஜனநாயகமும் இல்லை சட்டமும் இல்லை.
சட்டம் இல்லாத நாட்டிலேயே ஒரு சட்டத்துக்கான அமைச்சு கூட இந்த நாட்டிலே தேவையில்லை உங்களுக்கு இந்த நாட்டிலே தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டத்தை நீங்கள் அமல்படுத்துகின்றீர்கள் என்றால் ஏன் இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நாட்டை நீங்கள் வடக்கு கிழக்கை பிரித்து தனி நாடாக கொடுக்க வேண்டியதுதானே இல்லையென்றால் ஒரே நாட்டிற்கு உள்ளே ஒரே சட்டத்தை பேணி பாதுகாக்க முடியாவிட்டால் ஒரே நாடு சேவை இல்லை அந்த நிலைமைக்கு நீங்கள் எங்களை தள்ளி விடுகின்றீர்கள் ஏனென்றால் தெற்கிலே நடைபெறுவது வடக்கிலும் நடைபெற வேண்டும் ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டமாக இருந்தால் நீங்கள் இவ்வாறான தொந்தரவுகளை எங்களுக்கு கொடுக்கக் கூடாது.
எங்களைப் போன்ற தமிழ் தேசியத்துடன் இணைந்திருக்கும் தமிழ் தேசிய தலைவர்களை அச்சுறுத்துவதன் மூலம் எங்களது இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அச்சுறுத்துவதன் மூலம் நாங்கள் இதனை நிறுத்தப் போவதில்லை ஏனென்றால் உங்களுக்காக உயிர் நீத்தவர்கள் நாங்கள் தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டுதான் இருப்போம் ஏனென்றால் அவர்கள் அவர்களுக்காக மரணிக்கவில்லை வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்காக மரணித்தவர்கள் அதிலே பொதுமக்களும் சிக்குண்டு மரணித்திருக்கின்றார்கள் ஆகவே அனைத்து மக்களுக்காகவும் அனைத்து உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் தொடர்ச்சியாக எங்களது நினைவேந்தல்களை செய்து கொண்டு தான் வருவோம் எத்தனை அச்சுறுத்தல்களும் எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றத்திலேயே வழக்குகள் தாக்கல் செய்தாலும் நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.
எங்களுடன் இந்த நினைவேந்தல்கள் நின்று போகுமாக இருந்தால் எதிர்கால சந்ததிக்கு இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான நாங்கள் போராடவில்லை என்கின்ற ஒரு என்ன பாடு மாத்திரம் இன்றி எங்களுடைய எதிர்கால சந்ததியினர் ஆவது நிம்மதியாக உரிமைகளை பெற்று சுதந்திரமாக வடகிழக்கு கிளை வாழ்வதற்கு ஒரு வழி ஏற்படுத்த வேண்டும்.