மட்டக்களப்பு வாகரை தொடக்கம் கதிரவெளி ஆகிய பகுதிகளில் இடம்பெறும் இல்மனை மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவற்றை தடுக்குமாறு கோரி வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக வாகரை தொடக்கம் கதிரவெளி பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மீனவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் கோரளைப்பற்று வாகரை பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்ற வேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு முன்னர் பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகத்தின் பிரதான வாயில் முன்பாக நின்றனர்.
குறித்த இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா வருகை தந்த தங்களுடைய போராட்டம் தொடர்பில் அபிவிருத்தி கூட்டத்தில் கதைக்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர் அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தன் வாகனத்தில் வருகை தந்த போதும் வாகனத்தை இடைநிறுத்தாமல் சென்றனர்.
.அதன் பின்னர் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததுடன் பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலை மூடி போலீசார் கடமை ஈடுபட்டிருந்தனர் போலீசார் போராட்டக்காரர்களை கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அனுமதிக்கவில்லை.
கூட்ட நிறைவடைந்ததும் பிரதேச செயலக செயலாளர் அலுவலகத்தில் வைத்து மூன்று ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சந்திரகாந்தன் சந்தித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அலுவலகத்துக்கு வெளியில் இறால் பண்ணை மற்றும் இல்மணைட் தொடர்பாக போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சந்திரகாந்தன் மற்றும் ஜனா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கூட்டம் நடைபெற்ற பின்னர் சந்திராகானந்தன் கூட்டம் தொடர்பிலும் இறால் பண்ணை தொடர்பான போராட்டம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.