மட்டக்களப்பு பட்டிப்பளைபிரதேச செயலகத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட மூவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சனிக்கிழமை (03) கல்லடி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இந்த கைது நடடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான சனிக்கிழமை (04) காலை 10 மணியளவில் கல்லடி பகுதியிலுள்ள வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வியாபாரத்துக்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரையும் அதனை வாங்க வந்த இருவரையும் அங்கிருந்த விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்ததுடன் அவர்களிடமிருந்து 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் மோட்டர்சைக்கிள் ஒன்று இரண்டு கையடக்கத்தொலைபேசிகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கல்லடிபகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர்கள் இருவரையும் சான்றுப் பொருளான ஐஸ் போதைப் பொருளையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.