இலங்கையில் இருந்து 100,000 குரங்குளை கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் அத்தகைய கோரிக்கையை தாம் முன்வைக்கவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இது தொடர்பான சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக பங்களிப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 11ஆம் திகதி விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை விலங்குகளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியிருந்தது.
இதன்படி, 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இலங்கை குரங்குகள் சீனா செல்வதாக கூறப்பட்ட நிலையில், குரங்குகளின் விமானநிலைய ஃசெல்பிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.