கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்கவேண்டாம் என்று கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்
பட்டதைத் தொடர்ந்து போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா வைத்தியசாலையால் கோரப்பட்டிருந்தது.இந்த நிலையில், கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்கவேண்டாம் என்று சுகாதாரஅமைச்சு அறிவுறுத்தியுள்ளது.வடக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரால் நேற்று முன்தினம் சூம் செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதாரசேவைகள் பணிப்பாளர்களுக்குதெரிவிக்கப்பட்டது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களில் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வேறு நோய்கள் இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அமைச்சு வாய்மொழி மூலமாக அறிவுறுத்தியுள்ளது.