நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அமிர்தகழியை வசிப்பிடாகவும் கொண்ட அமரர். திருமதி. ஜனகவதனி லிங்கேஸ்வரராஜா அவர்கள் 2024.02.03ந் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் லிங்கேஸ்வரராஜா (மின்சாரசடை, மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும். தங்கரெட்ணம் ராஜமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைகுந்தராஜா, திருமதி. இராசலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், துவாரகா, யனுஷ்கா, சஹஸ்ருத் ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரகாசன், கிருஸ்ணஜினா, தீபயாழினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாணிக்கேஸ்வரராஜா, திருக்கேதிஸ்வரராஜா, காலஞ்சென்ற சிவநேசராஜா, சிவகுமார், சீவனேஸ்வரி, மகேஸ்வரி, நிரோஜினி, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனியும், யோகேஸ்வரி, ரேணுகா, பரமேஸ்வர, கோமதி, விவேகானந்தராஜா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும். காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை, பாக்கியவதி, கிருஸ்ணபிள்ளை, மீனாட்சி, கந்தசாமி, சொக்கலிங்கம் மற்றும் மகேஸ்வரி, காந்திமதி, மகேந்திரன் ஆகியோரின் பேத்தியாரும். ரெனோஷன், மகிலன், சர்வமி, ஜெயதுர்க்கா, ஹர்ச்சீக்கா ஆகியோரின் அன்பு மாமியும். பவிஷ்னா, பிரஹஷ்னா, பௌர்னிகா, கீத்ஜனன், புவனேஸ்வரி, கங்காதரன், கங்கேஸ்வரி, சிவதர்ஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும், யதேஷ், திரனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், காலஞ்சென்றவர்களான சௌந்தரராஜன், ராஜேந்திரன், சரஸ்வதி மற்றும் கோபாலசிங்கம், மங்கையற்திலகம், தெய்வநாயகி, சாந்தி, விஜயா ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2024.02.08ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று காலை 10.00 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகன சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்.