battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தயாபரனின் மாமனாரும், battinaatham ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அருண் பிரதீஸின் பாட்டனுமாகிய தாமோதரம் பிள்ளை அழகையா சற்று முன் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழ் தேசிய போராட்டத்திற்காக தனது முழு குடும்பத்தையும் ஈடுபடுத்தி அதற்காகவே தன்னை அர்ப்பணித்து அதன் காரணமாகவே பல இடப்பெயர்வுகளையும், சிக்கல்களையும், இன்னல்களையும் அனுபவித்து நோயுற்ற நிலையில் இருந்த அவர் தனது 93 வது வயதில் யாழ் கொக்குவிலில் உள்ள அவரது சொந்த வசிப்பிடத்தில் இன்றைய தினம் (04) காலமானார்.
அன்னாருக்கு battinaatham ஊடகத்தின் இதயம் கனிந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.








