நாட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் சொத்துகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கடைநிலை பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹரக்கட்டா என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தொடர்பு பேணியமை தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் சொத்து விபரங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்பு பேணி சொத்துக்களை குவித்த சில உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹரக்கட்டா என்பவரிடம் எதற்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.