மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மென்பந்து கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘விளையாட்டு திறமைகளை அங்கீகரித்து ஊக்குவித்தல்’ மையத்தால் செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
இச் செயற்றிட்டமானது மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இளைஞர்களை நாளைய சமூகத்தின் ஆளுமை மிக்க தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மென்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்ட போட்டிகள் நோக்கில் நகர்த்தும் நோக்கில், அணிக்கு 15 பேர் என்ற ரீதியில் ஆறுகள் அணிகளைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்;டி எதிர்வரும் 16,17 மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கொக்குவில் அக்னி விளையாட்டுக் கழக மைதானத்தில் போட்டி நடைபெறும்.
இச் சுற்றுப் போட்டிக்கான சவால் கிண்ணம், வீரர்களுக்கான சீருடை, போட்டிக்கான பாடல் அடங்கிய இறுவட்டு வெளியீடு நிகழ்வு என்பன, ‘விளையாட்டு திறமைகளை அங்கீகரித்து ஊக்குவித்தல்’ மையத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் போட்டிக்கான அனுசரணையாளர்கள், சீருடைக்கான அனுசரணையாளர்கள், விளையாட்டு அணி வீரர்கள், விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் மையத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கொண்டனர்.